UAE Tamil Web

அமீரகம்: குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கு இனி பெட்ரோல் இலவசம் : புதிய அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!

petrol

தேவையின்பேரில் எரிபொருள் மற்றும் கார் சேவை ஆகியவற்றை வழங்கும் நிறுவனமான CAFU, அல் இஸான் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, அஜ்மானில் குறைவான ஊதியம் பெறும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இலவச எரிபொருள் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் கீழ்நிலை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அல் இஸான் அமைப்பால் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்திற்கு 8 எரிபொருள் ட்ரக்குகளை CAFU வழங்கியிருக்கிறது. கடந்த 2 நாட்களில் 100 குடும்பங்கள் மற்றும் தனிபர்களுக்கு இதன்மூலம் இலவச எரிபொருள் விநியோகம் நடைபெற்றிருக்கிறது.

CAFU நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரஷீத் அப்துல்லா அகமது அல் குரைர் இதுபற்றிப் பேசுகையில்,” ஒரு நிறுவனமாக இந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தத் திட்டம். அல் இஸான் அமைப்புடன் இணைந்து மக்களின் குறைகளைத் தீர்க்கும் திட்டத்தில் பணியாற்றுவது பெருமையாக உள்ளது. சமூக ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு கட்டமைப்பை உருவாக்குவதே எங்களது லட்சியம்” என்றார்.

“குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் தேவைகளைத் தீர்க்கும் திட்டத்தில் CAFU உடன் இணைந்து பணியாற்றிவருகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு நிறுவனங்களும் கையெழுத்திடும்” என அல் இஸான் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஷேக் டாக்டர்.அப்துல் அஜீஸ் பின் அலி பின் ரஷீத் அல் நுவைமி தெரிவித்தார்.

முன்களப் பணியாளர்கள், குறைவான வருமானம் கொண்ட நீல நிறக் கழுத்துப்பட்டை தொழிலாளர்கள் ஆகியோருக்கு இலவசமாக எரிபொருள் வழங்கும் துபாய் சுகாதார ஆணையத்தின் திட்டத்திலும் CAFU நிறுவனம் பங்கெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

petrol
14 Shares
Share via
Copy link