UAE Tamil Web

அடுக்கடுக்காக குவிந்த புகார்கள்.. பொது கடற்கரைகளில் இனி முகாமிடத் தடை – Ras Al Khaimah நகராட்சி எச்சரிக்கை!

அமீரகத்தில் பொதுக் கடற்கரை பகுதிகளில் முகாமிடுவதைத் (Camping) தடை செய்யும் முடிவை ராசல் கைமா நகராட்சித் துறை செவ்வாயன்று எடுத்துள்ளது. அப்பகுதி குடியிருப்பாளர்கள் மற்றும் கடற்கரைக்கு செல்வோரிடமிருந்து குடிமை அமைப்புக்கு பல புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராஸ் அல் கைமா நகராட்சித் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே நகராட்சித் துறையின் அனுமதியின்றி கடலோரப் பகுதிகளுக்கு அருகில் கூடாரங்களை அமைப்பதை அதிகாரிகள் கவனித்துள்ளனர். இதன் விளைவாக அமீரகத்தின் பொதுவான தோற்றத்தை சிதைப்பதாக நம்பப்படுகிறது.

மேலும் பொது இடங்களை மக்கள் ரசிப்பதற்கு இடையூறாகவும் இது போன்ற விஷயங்கள் இருப்பதால் பலரும் இதை கண்டு முகம் சுளிக்கின்றனர் என்றே கூறலாம்.

மேலும் இதுபோன்ற இடங்களில் யாருக்கும் Camping செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். “இந்த கடற்கரைகள் மற்றும் சுற்றுலாப் பகுதிகள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும். இது எந்த வகையிலும் மீறப்படக்கூடாது, துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது” என்றும் அதிகாரிகள் கூறினார்.

மேலும் இதுபோன்ற விஷயங்களில் புகார்கள் அளிக்கவும் மற்றும் விசாரணைகளுக்கு அணுகவும் நகராட்சியின் 800661 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap