UAE Tamil Web

இந்தியர்கள் விசிட்டிங் விசாவில் அமீரகம் வரலாமா..?

REPATRIATION-FLIGHT

கொரோனா காரணமாக மாதக்கணக்கில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு பயணிகள் விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட அமீரக அரசினால் பயணத்தடை விதிக்கப்பட்ட 6 நாடுகளில் உள்ளவர்களுள் அமீரக ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்கள் அமீரகம் வரலாம் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் அனைவரும் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் ஆகஸ்டு 5 ஆம் தேதிமுதல் அமீரகம் வர ICA விடம் விண்ணப்பிக்கலாம். தடுப்பூசி சான்றிதழை பயணிகள் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பிட்ட சில பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசி எடுக்காவிட்டாலும் அமீரகம் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

விசிட்டிங் விசாவில் வரலாமா..?

ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் விசிட்டிங் விசாவில் அமீரகம் வரலாமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. இதுகுறித்து அமீரக அரசு அதிகாரி ஒருவரை நம்முடைய இணையதளத்தின் ஆசிரியர்குழு தொடர்புகொண்டது.

“தற்போதைய நிலையில் செல்லுபடியாகும் ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அமீரகம் திரும்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விசிட்டிங் விசாவில் அமீரகம் வருவதற்கு அமீரக அரசால் விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. இருப்பினும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன” என அதிகாரி தெரிவித்தார்.

ஆகவே விரைவில் விசிட்டிங் விசாவிலும் இந்தியர்கள் அமீரகம் வர அனுமதிக்கப்படுவார்கள் என நம்பலாம்.

REPATRIATION-FLIGHT
16 Shares
Share via
Copy link