ராஸ் அல் கைமாவில் நடந்த பயங்கர வாகன விபத்தில் அமீரகத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணுக்கு ஆறு மற்றும் நான்கு வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையின் விசாரனையின், வாகன ஓட்டிய அப்பெண் வண்டியின் கட்டுப்பாட்டை இழந்ததால், பலமுறை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நள்ளிரவு 12.30 மணிக்கும் 1 மணிக்கும் இடையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆபரேஷன்ஸ் அறைக்கு காவல்துறை அழைப்பு விடுத்து, போக்குவரத்து நிபுணரையும் ரோந்து படையினரையும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைத்தது. பின்னர் உயிரிழந்த அந்த பெண்ணின் உடலை மீட்ட காவல்துறை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது..
இதனையடுத்து ராஸ் அல் கைமாவில் உள்ள அல் ஹுதையபா அடக்கஸ்தளத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.