UAE Tamil Web

துபாயில் பரபரப்பு : சாலையில் எரிந்து சாம்பலான கார்..!

Car-fire

துபாயில் இன்று காலையில் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து உடனடியாக சிவில் பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குசைஸ் தீயணைப்பு நிலைய வீரர்கள், தகவல் கிடைக்கப்பெற்ற 6 வது நிமிடத்தில் சம்பவ இடத்திற்குச் சென்றனர். மிர்திஃப் சிட்டி செண்டருக்கு எதிரே காலை 10.21 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

தீ முழுமையாக அணைக்கப்பட்டாலும் கார் கடுமையாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விபத்தினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என சிவில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

விபத்திற்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.

Car-fire
0 Shares
Share via
Copy link