துபாய் விமான நிலையத்தில், மூன்றாவது மாடியில் இருந்து கார் கீழே விழுந்து கோர விபத்து..!

Car falls from third floor of multi-level parking at Dubai airport, driver dies ( Photo : Dubai Police)

துபாய் விமான நிலையத்தில், மூன்றாவது மாடியில் வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து கார் எதிர்ப்பாராத விதமாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆசியாவை சேர்ந்த வாகன ஓட்டி உயிரிழந்தார். பார்க்கிங் பகுதியில் இருந்து கார் கீழே விழுந்தபோது வாகன ஓட்டுநர் வாகனத்திற்குள் இருந்ததாக அரபு நாளேடான Al Bayan செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த ஓட்டுநர் தனது காரை வாகன நிறுத்துமிடத்திற்குள் நிறுத்த முயற்சித்துள்ளார், ஆனால் அவரால் முடியவில்லை. இதன் காரணமாக மூன்றாவது மாடியில் இருந்து அவர் காருடன் விழுந்து உயிரிழந்ததாக அமீரக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துபாய் காவல்துறையின் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய், கடந்த வியாழக்கிழமை காலை 8 மணியளவில் இந்த சம்பவம் குறித்த தகவல்கள் செயல்பாட்டு அறைக்கு கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து அவசர வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...