UAE Tamil Web

கொஞ்ச நேரத்தில் சோலி முடிந்திருக்கும் – அபுதாபி காவல்துறை வெளியிட்ட திக்..திக்.. வீடியோ..!

accident

அபுதாபி காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பல்வேறு திட்டங்களின் மூலமாக பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், அதிவேகம், சென்று கொண்டிருக்கும் லேனை மாற்றுதல், சிக்னலை மதிக்காமல் சென்று போஸ்ட் மரத்தை முத்தம் கொடுப்பது என வாகனவோட்டிகள் செய்யும் கொனஷ்டைகள் ஏராளம்.

அப்படி, டிராபிக் சிக்னலில் நிற்காமல், எனெக்கென்ன… என காரை இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு ஓட்டி, பின்னால் பைக்கில் வந்தவரை பரலோகம் அனுப்பப்பார்த்த கார் ஒன்றின் வீடியோவை அபுதாபி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சாலை விதிகளை மதிப்பது, நம்முடையது மட்டுமல்லாமல் சக சாலை உபயோகிப்பாளர்களுக்கும் பாதுகாப்பானது என்பதை மறக்கவேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.

accident
29 Shares
Share via
Copy link