2021 ஆம் ஆண்டிற்கான ஷார்ஜா காவல்துறையால் புதிதாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, வேக வரம்பை மீறிய 765,560 வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி ரேடார் கருவிகளில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் பலர் மணிக்கு 180 கிமீ வேகத்தில் வேகமாகச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
அதிகபட்ச வேகமாக ஷார்ஜா – கோர்ஃபக்கான் சாலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு வாகனம் மணிக்கு 279 கி.மீ வேகத்தில் சென்றுள்ளது. இதனால் அந்த வாகனத்தை ஓட்டிய ஓட்டுநரின் உரிமத்தில் 23 பிளாக் மார்க்குகள், 3,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 60 நாட்கள் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலின்போதும் ஆபத்தான முறையில் வேகமாகச் செல்வதாகவும், பொதுப் பாதுகாப்பில் சிறிதும் அக்கறையும் காட்டுவதில்லை என்றும் போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.