UAE Tamil Web

அமீரகத்தில் மீண்டும் அதிகரிக்கும் நோய் தொற்று.. தடைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை – எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள்

அமீரகத்தில் தினசரி பெருந்தொற்று வழக்குகள் ஒரு வாரத்தில் 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக அமீரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் நோயாளிகள் சேர்க்கப்படும் விகிதங்களும் உயர்ந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

தினசரி நோய்த்தொற்றுகளின் அளவு ஜூன் 2022ன் தொடக்கத்தில் கிட்டத்தட்ட 450ல் இருந்து நிலையில் இன்று ஜூன் 13 அன்று 1,300 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் 3,000க்கும் மேற்பட்ட தினசரி நோய்த்தொற்றுகளுக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் வழக்குகள் 200க்கும் குறைவாக பதிவானது. இருப்பினும், இந்த மாதம் வழக்குகள் மீண்டும் கடுமையாக அதிகரித்துள்ளன.

இன்று திங்களன்று நடந்த ஒரு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அரசாங்க செய்தித் தொடர்பாளர், சில குடியிருப்பாளர்கள் பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பெருந்தொற்று விதியை மீறினால் 3,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார். மூடிய இடங்களில் வசிப்பவர்கள் முகமூடி அணிவதை உறுதிசெய்ய ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap