அமீரகத்தின் 50வது தேசிய தினத்தினை முன்னிட்டு அமீரக முன்னோடிகள் மற்றும் இந்நாள் ஆட்சியாளர்களின் புகைப்படங்கள் பொறித்த வெள்ளி நாணயங்களை வெளியிட்டுள்ளது அமீரக மத்திய வங்கி.
மொத்தம் 3000 காசுகள் தலா 28 கிராம் எடையில் அமீரக மத்திய வங்கியின் தலைமை அலுவலகங்களில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காசின் மதிப்பு 50 திர்ஹம்ஸ் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளிக் காசின் ஒருபுறத்தில் அமீரகத்தின் முன்னாள் ஆட்சியாளர் ஒருவர் மற்றும் இந்நாள் ஆட்சியாளர் ஒருவருடைய புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் அமீரகத்தின் 50 வது ஆண்டு சின்னம் மற்றும் மத்திய வங்கியின் பெயர் ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாணயத்தின் மதிப்பான 50 திர்ஹம்சும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த 7 நாணயங்களையும் வாங்க நினைப்போர் அமீரக மத்திய வங்கியின் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் 2000 திர்ஹம்ஸ் செலுத்தி ஜனவரி 3 ஆம் தேதிமுதல் பெற்றுக்கொள்ளலாம்.