பௌலிங் மையத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட வெளிநாட்டவர் CCTV-ல் சிக்கினார்..!

CCTV captures Dubai expat groping woman at bowling centre

ஒரு பௌலிங் மையத்தில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக துபாயில் வசிக்கும் வெளிநாட்டவர் மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் செப்டம்பர் 22ஆம் தேதி நடந்ததாகவும், சிசிடிவி கேமராக்களில் சிக்கியதாகவும் பொது வழக்கு பதிவுகள் காட்டுகின்றன, இது அல் பார்ஷா காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் தெரிவித்துள்ள 32 வயதான ஆஸ்திரேலிய பெண் கூறுகையில், “நான் எனது நண்பர்களுடன் பௌலிங் விளையாடுவதற்காக ஒரு ஐந்து நட்சத்திர ரிசார்ட்டுக்குச் சென்றேன். அச்சமயம் நான் என் காலணிகளை அணிந்துகொண்டிருந்தபோது, ​34 வயதான பிரிட்டிஷ் குடியிருப்பாளர் எனக்கு மிக அருகில் வந்து தகாத முறையில் என்னை தொட்டார் ” என்று அரசு தரப்பு விசாரணையாளர்கள் முன் விவரித்தார்.

இந்நிலையில், ரிசார்ட்டில் எடுக்கப்பட்ட சி.சி.டி.வி படங்கள் குற்றவாளிக்கு எதிரான சாட்சியமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி 28ஆம் தேதி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Khaleej Times

Loading...