UAE Tamil Web

அமீரகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு களைகட்டபோகும் ரமலான் மாத கொண்டாட்டம்

அரபு மாதமான புனித ரமலான் வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க இருக்கும் நிலையில் அமீரகத்தில் இஃப்தார் டென்ட்களை (பந்தல்) கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் அமைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமான (NCEMA) குழு ரமலான் மாதத்தில் இஃப்தார் மேற்கொள்ள பந்தல் அமைப்பதற்கு அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.

பந்தலில் அமருபவர்கள் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைப்புடிக்க வேண்டும் என்றும் ஒரு முறை பயன்படுத்தக்குட்டிய மேஜை துணிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் NCEMA-இன் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா நோய் காரணமாக ரமலான் மாதம் முன்பு போல் இல்லாததால் அமீரக மக்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால், அமீரக அரசின் இந்த அறிவிப்பால் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap