ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெசிடென்ட் விசாவில் சீர்திருத்தங்கள் அக்டோபர் 2022இல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, பல மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் மூலம் பல நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. நீண்ட கால கோல்டன் விசா திட்டத்தை விரிவுபடுத்தியது. க்ரீன் விசாக்கள் என்ற புதிய ஐந்தாண்டு விசா அறிமுகப்படுத்தப்பட்டது.
விசா சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் விசா காலாவதியான பிறகு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் உள்ளிட்ட பல மாற்றங்கள் சமீபத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இங்கே, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு விசா தொடர்பான மாற்றங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. மிஸ் பண்ணாம தெரிந்துக்கோங்க!
குழந்தைகளுக்கு sponsor வழங்குவதற்கான விதிகள் தளர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை குடும்பங்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்து இருக்கிறது. அனைத்து வகை ரெசிடென்ட் விசாக்களுக்கும் பொருந்தும். அமீரகத்தில் இருப்பவர்கள் மகன்களுக்கு 18 வயதில் இருந்து 25 வயது வரை sponsor செய்யலாம். திருமணமாகாத மகள்களுக்கு ஸ்பான்சர் செய்ய வயது வரம்பு இல்லை.
கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 10 வருட விசாவில் பெற்றோருக்கு ஸ்பான்சர் செய்யலாம். நீங்கள் கோல்டன் விசா வைத்திருப்பவராக இருந்தால், உங்கள் பெற்றோருக்கு 10 வருட விசாக்களிலும் ஸ்பான்சர் செய்யலாம். முன்னதாக, நீண்ட கால long-term residency scheme பயனாளிகள், வழக்கமான ரெசிடென்சி வைத்திருப்பவர்களை போலவே, பெற்றோருக்கு ஓராண்டுக்கு ஸ்பான்சர் செய்ய முடிந்தது.
விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. identity, குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP) ஆகியவற்றிற்கான ஃபெடரல் ஆணையம் வழங்கும் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கான கட்டணம் 100 திர்ஹம்ச் அதிகரித்துள்ளது. கூடுதல் ஸ்மார்ட் சேவைக் கட்டணம் அமீரக ஐடி மற்றும் ரெசிடென்சி விசாக்களுக்கும் பொருந்தும்.
ஃப்ரீசோன் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் குறைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்படும் ஃப்ரீசோன் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மூன்று ஆண்டுகளில் இருந்து இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
விசா காலாவதியான பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேற நீண்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ரெசிடென்சி விசா ரத்து செய்யப்பட்ட பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேறுவதற்கான சலுகைக் காலம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 60 முதல் 180 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நடைமுறையில் 30 நாட்களாக இருந்தது.
ரெசிடென்சி அமீரக ஐடியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டில் ரெசிடென்சி விசா ஸ்டிக்கர்களை முத்திரையிடும் நடைமுறையை அமீரகம் நீக்கியுள்ளது. மாறாக, குடியிருப்பாளர்களின் அமீரக ஐடிகள் அதிகாரப்பூர்வமாக அவர்களின் ரெசிடென்சி ஆவணங்களாகச் செயல்படுகின்றன.
6 மாதங்களுக்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களுக்கான மறு நுழைவு அனுமதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியே தங்கி இருப்பவர்களின் ரெசிடென்சி கேன்சல் செய்யப்பட்டது. இப்போது அத்தகைய குடியிருப்பாளர்கள் அதற்கான காரணத்தைக் குறிப்பிடுவதன் மூலம் மறு நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர் ஒப்புதல் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் நாட்டிற்குள் நுழைய வேண்டும்.