UAE Tamil Web

அமீரக விசா நடைமுறைகளில் மாற்றம்.. பல்வேறு புதிய விசாக்களை அறிமுகப்படுத்திய அரசு!

அமீரகத்திற்கு வருகைத்தர பல்வேறு வகையான விசா வகைகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விசா திட்டங்களுக்கு ஸ்பான்சர் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்து விசாக்களையும் எளிதாக பெறவும் மற்றும் வருகைத்தரும் பார்வையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் இப்புதிய விசாவகைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில் கூடுதல் சிறப்பாக அனைவருக்கும் ஒரு முறை நுழைவு விசா மற்றும் பல முறை நுழைவு விசாக்கள் (MULTI VISA) வழங்கப்படுகின்றன. அதன்படி அமீரகத்திற்கு 90 நாட்கள் விசாவில் வருபவர்கள, மேலும் 90 நாட்கள் விசாவை புதுப்பித்துக்கொள்ளலாம்.

வேலை விசா (WORK VISA)

அமீரகத்தில் வேலை தேட வருகைத்தரும் இளம் தலைமுறையினர் மற்றும் திறமையான நிபுணர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின்படி, உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களின் படித்து முடித்த புதிய பட்டதாரிகளுக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபட்ச கல்வி நிலை இளங்கலை பட்டம் ஆகும்.

வர்த்தக விசா (BUSINESS VISA)

அமீரக வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் விசா இன்றி எளிதாக நுழையலாம்.

TOURIST விசா

அமீரகத்தில் உள்ள சுற்றுலா துறைகள் வழங்கப்படும் வழக்கமான சுற்றுலா விசாவிற்கு கூடுதலாக, 5 ஆண்டுகளுக்கு பல நுழைவு சுற்றுலா விசா (MULTI VISA) அறிமுகப்படுத்தப்பட்டுளது.

இந்த டூரிஸ்ட் விசா நடைமுறைக்கு ஸ்பான்சர்கள் தேவையில்லை. இந்த விசாவில் வருபவர்கள் 90 நாட்கள் தொடர்ந்து அமீரகத்தில் தங்கலாம். மேலும் இந்த விசாவை ஒரு வருடத்திற்கு 180 நாட்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.

இந்த விசாவிற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன், கடந்த ஆறு மாதங்களில் $4,000 வங்கி இருப்பு அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு தொகைகள் இருப்பதற்கான ஆதார சான்று வேண்டும்.

உறவினர்கள் அல்லது நண்பர்களைப் பார்க்க நுழைவதற்கான அனுமதி (Entry permit to visit relatives or friends)

அமீரகத்தில் வசிக்கும் உங்களது உறவினர்களையோ, நண்பர்களையோ காண விசா பெற்றுக்கொண்டு வரலாம். இந்த விசாவுக்கு ஸ்பான்சர் தேவையில்லை.

தற்காலிக பணி விசா (TEMPORARY WORK)

அமீரகத்திற்கு தற்காலிகமாக பணிபுரிய வருகைத்தருவோருக்காக இப்புதிய விசா கொண்டுவரப்பட்டுள்ளது. தற்காலிக பணி என்பதால் இந்த விசா முதலாளியால் ஸ்பான்சர் செய்யப்படுகிறது. இந்த விசாவுக்கு தற்காலிக பணி ஒப்பந்தம் அல்லது முதலாளியிடமிருந்து வருகை குறித்த தெளிவான கடிதம் மற்றும் வேலை செய்வதற்கான சுகாதாரத் தகுதிக்கான சான்றிதைழ் அவசியமாகும்.

படிப்பு அல்லது பயிற்சி விசா (STUDIES OR TRAINING)

இந்த வகை விசா பயிற்சி மற்றும் படிப்புகள் அல்லது இன்டர்ன்ஷிப் திட்டங்களுக்கு அமீரகம் வருபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாவை ஸ்பான்சர், அரசு, தனியார் நிறுவனங்களில் உரிமம் பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்வி அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் வழங்கலாம்.

மேலும் இந்த விசா பெறுவதற்கு படிப்பு, பயிற்சி அல்லது இன்டர்ன்ஷிப் திட்டத்தின் விவரங்களையும் அதன் கால அளவையும் தெளிவுபடுத்தும் கடிதம் நிறுவனத்திடமிருந்து தேவைப்படுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap