UAE Tamil Web

துபாய்.. பிளாஸ்டிக் பைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்.. இயற்கை வளம் காக்க ஒன்று கூடுவோம் – அழைப்புவிடுக்கும் Executive Council

துபாயில் வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல், சில்லறை விற்பனை, ஜவுளி மற்றும் எலக்ட்ரானிக் கடைகள், உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தங்கள் கவுன்டர்களில் விற்கப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பைகளுக்கு 25 Fils வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ் டெலிவரிகளுக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது, இரண்டு ஆண்டுகளுக்குள் ஒற்றைப் பயன்பாட்டு (Single Use) கேரி பேக்குகள் முற்றிலும் தடைசெய்யப்படும் வரை இந்தக் கொள்கை ‘பல நிலைகளில்’ மதிப்பீடு செய்யப்படும் என்று துபாய் நிர்வாகக் குழு பிப்ரவரி மாதம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

ஒரு கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி, துபாயின் நிர்வாக கவுன்சில் கூறியதாவது, “100 சதவீத வணிகங்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பைகளுக்கு மொத்த தடை அல்லது கட்டணம் விதிக்கப்படுவதை ஆதரிப்பதாக கவுன்சில் கூறியது.

துபாயில் வசிப்பவர்களில் 85 சதவீதம் பேர் தாங்களும் இந்த நடவடிக்கையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பிளாஸ்டி பொருட்களை உண்டு ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் மற்றும் ஆமைகள் இறக்கின்றன எந்த வேதனை தரும் தகவலையும் கவுன்சில் வெளியிட்டுள்ளது. ஆகவே இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு கொள்கை சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதாக உள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க தனிநபர்களை ஊக்குவிப்போம் என்றும் துபாய் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. அரசோடு இணைந்து மக்களாகிய நாமும் இந்த பிளாஸ்டிக் ஒழிப்பில் பங்கேற்போம்.

இந்நிலையில் நுகர்வோர் தங்களது பைகளை கொண்டு வந்தாலும் சில்லறை வணிக நிலையங்களில் இந்த கட்டணம் கணக்கிடப்படுமா? என்று கேட்டல்.. நுகர்வோர் தங்களது பைகளை கொண்டு வரும்பட்சத்தில் இந்த கட்டணம் கணக்கிடப்படாது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap