உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை தீவிர்க்க உற்பத்தியை அதிகரிப்பதாக அமீரகம் முன்வந்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்ததுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் காரணமாக விதிக்கப்பட்டபொருளாதாரத் தடையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவியது. இந்த பாதிப்பைச் சரிக்கட்டும் வகையில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபேக் நாடுகளின் உறுப்பினர் அமீரகம் முன்வந்ததுள்ளது.
இதனால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதிக்குப்பின், நேற்று சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 16.34 டாலர் அல்லது 13.2% குறைந்தது. கச்சா எண்ணெய் விலை பேரல் 111.14 டாலருக்கு விற்பனையாகிறது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் பேரல் 140 டாலராக அதிகரித்தது. இந்நிலையில், அமீரகம் தலையிட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாக தெரிவித்ததையடுத்து, விலை படிப்படியாகத் குறையத் தொடங்கியது.