37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

ஷார்ஜாவில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புதிய சாலை சந்திப்புகள்.! எப்பொழுது தொடங்குகிறது.?

sharjah

ஷார்ஜாவில் 103 மில்லியன் திர்ஹமஸ் செலவில் உருவாகும் உள்கட்டமைப்பு திட்டம், இரண்டு பெரிய சதுரங்களையும் (Squares) ஒரு ரவுண்டானாவையும் மாற்றி போக்குவரத்து சிக்னல்களுடன் குறுக்குவெட்டுகளாக (Intersections) அமைக்க உள்ளது என்று ஷார்ஜாவின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) அறிவித்துள்ளது.

sharjah routes

2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புதிய சந்திப்புகள், ஷேக் மஜித் பின் சக்ர் அல் காசிமி மற்றும் ஷேக் முகமது பின் சுல்தான் அல் காசிமி சதுரங்களை மாற்றியமைக்கவுள்ளது. மேலும் கட்டுமானப்பணி முடியும் வரை, போக்குவரத்துக்கு இடையூறு அளிக்காத வண்ணம் மாற்றுப்பாதைகள் மற்றும் மாற்று சாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

screenshot 8

இத்திட்டம் குறித்து எஸ்.ஆர்.டி.ஏ-வின் தலைவரான யூசெப் சலேஹ் அல் சுயைஜி கூறுகையில், “போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்தக்கூடிய சிறந்த குறுக்குவெட்டுகளை உருவாக்குவதற்கான, எமிரேட் அளவிலான வளர்ச்சித் திட்டத்தின் (Emirate-wide development project) ஒரு பகுதியாக இந்த மெகா திட்டம் உள்ளது என்றார்.

போக்குவரத்து நெரிசல்களைத் தீர்க்கும் திட்டம்:

ஷேக் மஜித் பின் சக்ர் அல் காசிமி சதுக்கம் நகரின் உள் சாலைகளை இணைக்கும் மிக முக்கியமான சாலைகளில் ஒன்றாகும் என்று SRTA-வின் சாலை திட்டத் துறை இயக்குனர் பாத்திமா அல் கெட்பி தெரிவித்துள்ளார்.

இந்த குறுக்குவெட்டு அல் அஸ்ரா, அல் காஃபியா, அல் ஃபாலாஜ் மற்றும் அல் ஜசாத் ஆகிய நான்கு குடியிருப்பு பகுதிகளுக்கு சேவை செய்கிறது. அத்துடன் ஒரு பள்ளி மாவட்டம் மற்றும் பிற முக்கிய வெளியேறும் இடங்களுக்கும் சேவை செய்கிறது. இந்த இடங்களில் தான் அதிக நேரங்களில் அதிக போக்குவரத்து காணப்படுகிறது (especially during peak hours) குறிப்பிடத்தக்கது.

மேலும் ஷேக் முகமது பின் சுல்தான் அல் காசிமி சதுக்கம் மிகவும் பிஸியாக உள்ளது என்று அல் கெத்பி கூறினார். இது அல் நக்கிலத், அல் மிர்காப், அல் காதிசியா மற்றும் ஷர்கான் பகுதிகளை இணைக்கிறது.

இதையும் படிங்க.!