UAE Tamil Web

துபாயில் சம்பவம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் – முதல் ஆட்டத்தில் மும்பை அணி தோல்வி!

2021 ஐபிஎல் 2வது பாதி ஆட்டம் துபாயில் நேற்று முதல் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக பொல்லார்ட் கேப்டனாக செயல்பட்டார். மும்பை அணியின் துல்லியமான பந்துவீச்சால் சென்னை அணி அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து கடுமையாக தடுமாறியது. 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு வெறும் 44 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பின்னர் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் மும்பை அணி பவுலர்களுக்கு தண்ணீ காட்டி ரன்களை குவிக்கத் தொடங்கினார்.

Image

அற்புதமாக விளையாடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் சேர்த்தார். தனது பங்கிற்கு அதிரடி காட்டிய பிராவோ வெறும் 8 பந்துகளில் 23 ரன்கள் சேர்க்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும் பிறகு விக்கெட்களை பறிகொடுத்து 20 ஓவர்களில் 136 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. அதிரடியாக விளையாடிய கெய்க்வாட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது

2 Shares
Share via
Copy link