துபாயில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள துபாய் Expo 2020, மார்ச் 31 அன்று நிறைவடைகிறது.
துபாய் Expo 2020-வில் இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்கின்றன. அதில் இந்திய அரங்கில், மார்ச் 18 முதல் 24 வரை தமிழக அரசு சார்பில், அரங்குகள் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மாபெரும் Expo 2020-இல் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் துபாய் வர உள்ளார்.
இதில் தமிழ்நாடு அரசு சார்பாக விவசாயம், கைத்தறி மற்றும் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கு ஒன்று அமைய உள்ளது.
தமிழ்நாடு சார்பாக அமைக்கப்பட உள்ள அந்த அரங்கில் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணமாக துபாய்க்கு வருகை தர உள்ளார்.
இந்நிலையில், தமிழகத்திற்கான தொழில் முதலீட்டை மேம்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்.