UAE Tamil Web

அப்பாயின்மெண்டே வேணாம்.. குழந்தைகள கூட்டி வந்தா மட்டும் போதும்.. ஊசி போட்டுக்கலாம்…

கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க தடுப்பூசி போடும் பணிகள் அமீரகம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக அபுதாபி சுகாதாரத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த விரும்பும் பெற்றோர்கள் எந்தவித அப்பாயின்மெண்டும் எடுக்காமல் நேரடியாக சேஹா தடுப்பூசி மையங்களுக்குச் சென்று உடனடியாக குழந்தைகளுக்கு தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மூத்த குடிமக்களும் இரு தவணை தடுப்பூசிகள், பூஸ்டர்களை எளிதாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், பெரியவர்களுக்கு எவ்வித சிரமங்களும் இருக்கக்கூடாது என்பதற்காக அபுதாபி சுகாதாரத்துறை எளிய முறையில் தடுப்பூசி செலுத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

0 Shares
Share via
Copy link