UAE Tamil Web

துபாயில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்… கட்டுக்குள் கொண்டுவந்த சிவில் பாதுகாப்பு படை!

துபாயில் இன்று மதியம் 12.52 மணியளவில் கார் திடீரென தீப்பற்றி எரிவதாக சிவில் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்த சில நிமிடங்களில் துபாய் டிசைன் டிஸ்ட்ரிகில் தீ பிடித்த காரை துபாய் தற்காப்புக் குழு அணைத்தது. இதனால் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.

இது குறித்து தெரிவித்த துபாய் சிவில் டிஃபென்ஸ், கட்டுப்பாட்டு அறைக்கு 12:53 மணியளவில் துபாய் டிசைன் டிஸ்ட்ரிக் பகுதியில் ஒரு கார் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதாக அவசர அழைப்பில் தகவல் வந்தததாக தெரிவித்தது.

துபாயில் உள்ள ஜபீல் தீ அணைப்பு நிலையத்திலிருந்த இருந்த தீ அணைப்பு வீரர்கள் 4 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர்  தீ அணைப்பு வீரர்கள் மதியம் 1:19 மணியளவில் தீயை அணைத்ததாக துபாய் தற்காப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

0 Shares
Share via
Copy link