UAE Tamil Web

முக்கியச் செய்தி: மணல்புயல் வீசும்; கவனமாக இருங்கள் – வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட மஞ்சள் எச்சரிக்கை..!

sand wind

அமீரகத்தின் கிழக்கு மலைப்பகுதிகளில் இன்று மதியம் 1.45 முதல் இரவு 7 மணிவரையில் மேகவிதைப்பு மூலமாக மழை பொழியும் (செயற்கை மழை) எனவும், அந்நேரங்களில் மணல் புயல் வீசும் எனவும் தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மழை மற்றும் மணல்புயல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கையை தேசிய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது எனில், மக்கள் வெளியே சென்றால் மிக கவனத்துடன் செயல்படவேண்டும் என்பது பொருளாகும்.

முன்னதாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றானது வீசும் எனவும், இதனால் 1.5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு மேல் சாலைகள் கண்ணுக்குப் புலப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.