34.8 C
Dubai
July 11, 2020
UAE Tamil Web

துபாயில் மீண்டும் இயங்கவிருக்கும் மெட்ரோ, டாக்ஸி மற்றும் பொது பேருந்து சேவைகள்..! எப்பொழுது முதல்.?

metro

துபாயின் மெட்ரோ, பொது பேருந்துகள் மற்றும் டாக்ஸி சேவைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வியாழக்கிழமை (நேற்று) இரவு அறிவித்தது.

இந்த முடிவானது கொரோனா வைரஸ் நெருக்கடியால் அமீரகத்தில் வெளியில் செல்லுவது(movements) மீதான கட்டுப்பாடுகளை ஓரளவு குறைக்க துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவின் முடிவை இது பின்பற்றுகிறது.

துபாய் மெட்ரோ மற்றும் பொது பேருந்து சேவைகளை ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கம் போல சாதாரண கட்டணத்தில் மீண்டும் தொடங்குவதாக RTA தெரிவித்துள்ளது. இருப்பினும் பயணிகள் மற்றவர்களிடமிருந்து சமூக விலகலை பின்பற்றுவது ( social distance) மற்றும் முகமூடி அணிவது உள்ளிட்ட தடுப்பு மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

டாக்ஸி பயணங்களுக்கான தற்போதைய பாதுகாப்பு சுகாதார நடவடிக்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும். அதாவது பின் இருக்கையில் இரு நபர்கள் மட்டுமே அமர வேண்டும் மற்றும் ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் இடையில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மேலும் பேருந்துகள் மற்றும் டாக்சிகள் சாதாரண கட்டணங்களின்படி இயங்கும் என்று RTA தெரிவித்துள்ளது.

துபாய் மெட்ரோ சேவை நேரம் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையும், வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையிலும் இருக்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பேருந்துகளைப் பொறுத்தவரை, காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை வழக்கமான நேர அட்டவணைகளில் இயங்கும். அதுமட்டுமின்றி மொத்தம் 13 பேருந்து வழித்தடங்கள் (8, 10, 12, A13, 17, 24, C01, C07, F18, F21, F34, F43 and X23) 30 நிமிட இடைவெளியில் இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடங்கள் 19 பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இயக்கப்படும். அதாவது ஓத் மேத்தாவில் உள்ள ரஷீத் மருத்துவமனை, அல் வஸலில் உள்ள ஈரானிய மருத்துவமனை, அல் குசைஸில் உள்ள ஜூலேகா மருத்துவமனை, அல் கலீஜ் சாலையில் உள்ள துபாய் மருத்துவமனை, தேய்ரா; அல் பரஹாவில் உள்ள பராஹா மருத்துவமனை, தேய்ரா; அல் குசைஸில் உள்ள அல் ஜதாஃப் NMC மருத்துவமனையில் லத்தீபா மருத்துவமனை; ஓத் மெத்தாவில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனை; மற்றும் அல் பார்ஷாவில் உள்ள சவுதி ஜெர்மன் மருத்துவமனை.

மேலும் கூடுதலாக, இந்த வழிகள் ஹெல்த்கேர் சிட்டியில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு சேவை செய்யும், எமிரேட்ஸ் சிறப்பு மருத்துவமனை, துபாய் பல் மருத்துவமனை, BR மெடிக்கல் சூட்ஸ், சப்பையர் சர்ஜரி சென்டர்(Sapphire Day Surgery Centre), அமெரிக்கன் ஹார்ட் சென்டர், டாக்டர் ரியாத் மருத்துவமனை, எமிரேட்ஸ் ஒருங்கிணைந்த மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை மையம்(Emirates Integra Medical & Surgery Centre), மெடிகிளினிக் சிட்டி மருத்துவமனை மற்றும் டாக்டர் சுலைமான் அல் ஹபீப் மருத்துவமனை போன்றவற்றிற்கும் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, பொது பார்க்கிங் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும், இரவு 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையிலும் கட்டண சேவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் RTA மேற்கொண்டுள்ளது. பேருந்துகள் மற்றும் டாக்சிகளும் தினமும் சுத்திகரிக்கப்படுகின்றன என்று RTA தெரிவித்துள்ளது.

இந்த போக்குவரத்து சேவைகளை படிப்படியாக மீண்டும் தொடங்குவது அவசியமான இடத்தில் தடுப்பு நடவடிக்கைகளுடன் கூடிய பொது ஒத்துளைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த விதி மீறல்களும் பொறுத்துக்கொள்ளப்படாது.

இந்த காலகட்டத்தில் பயணிகளின் நல்ல ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை RTA தனது கருத்தில் கொண்டு செயலாற்றுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!