UAE Tamil Web

காடுகளுக்கு நடுவே ஓர் சைக்கிள் பயணம் – துபாயில் புதிய முயற்சி!

சுற்றுலா பயணிகளின் ஹாட் ஸ்பாட்டாக திகழும் துபாயில் உள்ள பழமையான பூங்காக்களில் ஒன்று முஷ்ரிஃப் தேசிய பூங்கா. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் அட்டகாசமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது துபாய் முனிசிபாலிட்டி. சைக்கிள் ஓட்டிகளுக்கு விருந்து படைக்கும் விதமாக முஷ்ரிஃப் தேசிய பூங்காவில் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு சைக்கிள் பாதை ஒன்று உருவாகி வருகிறது. காடுகளுக்கு மத்தியில் 70,000 மரங்களுக்கு நடுவே இயற்கை எழில் நிறைந்த அமைப்புடன் இந்த சைக்கிள் பாதை அமைய உள்ளது.

நாள் ஒன்று 3,000 பேர் சைக்கிள் ஓட்டும் அளவுக்கு பெரிய அளவிலான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சைக்கிள் போட்டிகள், அட்வென்சர் ட்ரிப்கள் உள்ளிட்டவைகளையும் இந்த பூங்காவில் நடத்த முடியும். கரடு முரடாண மண் ரோட்டில் பூங்காவின் நுழைவு வாயிலில் பயணத்தை தொடங்கினால் 50 கிலோ மீட்டர் நிறைவு செய்துவிட்டு மீண்டும் ஆரம்ப இடத்திற்கே வந்துவிடலாம். துபாயிலேயே முதல் முறையாக உருவாகியுள்ள காடுகளுக்கு நடுவிலான இந்த சைக்கிள் பாதை விளையாட்டு வீரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

9 Shares
Share via
Copy link