UAE Tamil Web

“என் உயிர் இருக்கும்வரை அவர்களைப் போற்றுவேன்” – தியாகிகள் தினத்தை முன்னிட்டு துபாய் ஆட்சியாளர் உருக்கம்..!

sheikh mohammed 1

அமீரகத்தில் இன்று தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 ஆம் தேதி அமீரக தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. தேசிய விடுமுறை நாளான இன்று, அமீரகத்தின் நலனுக்காக உயிர்நீத்த மாவீரர்களின் நினைவை பொதுமக்கள், அதிகாரிகள், தலைவர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இதுகுறித்து உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்,

“நம் தியாகிகளின் நற்செயல்களும் தியாகங்களும் என் உயிர் இருக்கும் வரை நினைவில் இருக்கும், அவர்களின் இரத்தம் நம் அடையாளத்தில் வெளிப்பட்டு, நமது பெருமையை வலுப்படுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தியாகத் திருநாளில் அமீரகத்தின் மாவீரர்களின் பெருமையை நினைவு கூர்வோம்.

sheikh mohammed 1
1 Share
Share via
Copy link