அமீரகத்தில் இன்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அமீரகத்தின் நலனுக்காக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” இந்த சாதனை வீரர்களுக்கு நன்றி மற்றும் விசுவாசத்தை காட்டும் விதமாக நமது நாடு வடக்கிலிருந்து தெற்காகவும் கிழக்கிலிருந்து மேற்காக எழுந்து நிற்கிறது. எங்களது தியாகிகளுக்கு மகிமையும் அழியாத புகழும் உரித்தாகுக” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
تحية لشهداء الوطن الأبرار.. تحية لأمهات الشهداء الأخيار.. تحية لأبناء قواتنا المسلحة الباذلين أنفسهم لحماية تراب الإمارات.. يقف وطننا اليوم من شماله لجنوبه ومن شرقه لغربه إجلالًا واحتراماً ووفاءً لمن وضع روحه على كفه .. وأرخصها في سبيل وطنه.. المجد والخلود للشهداء #يوم_الشهيد pic.twitter.com/z458jgJzf6
— HH Sheikh Mohammed (@HHShkMohd) November 30, 2020
இன்று அமீரக ஆயுதப் படை வீரர்களுக்கு துபாய் ஆட்சியாளர் அளித்த செய்தியில்,” அமீரகத்தைக் காக்க உங்களையே தியாகம் செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினையும் ஆட்சியாளர் பகிர்ந்துள்ளார்.
அதேபோல, அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ட்விட்டர் வழியாக தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
On this day, we salute the fallen Frontline Heroes for their courage and dedication. They made the ultimate sacrifice on the frontline of defence of this country. They will remain in our hearts and inspire future generations.
— محمد بن زايد (@MohamedBinZayed) November 30, 2020
“நம் தியாகிகளின் ஆன்மா சாந்தியடையட்டும். அவர்களுடைய தியாகங்கள் கடினமான நேரங்களில் நம்முடைய பாதைக்கு ஒளி பாய்ச்சுகின்றன. நமது நாட்டையும் மக்களையும் காக்க தங்களது இன்னுயிரையும் அளித்த நம்முடைய கதாநாயகர்களையும் அவர்களுடைய விசுவாசத்தையும் நாட்டு மக்களோடு இணைந்து போற்றுகிறேன்” என அல் நஹ்யான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.