LED விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி உலகின் முதல் வணிக அளவிலான உட்புற தக்காளி பண்ணையை அறிமுகப்படுத்த இருக்கும் அபுதாபி.!

சுத்தமான தக்காளியை வளர்ப்பதற்கு எல்.ஈ.டி விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி உலகின் முதல் வணிக அளவிலான உட்புற தக்காளி பண்ணை (The world’s first commercial-scale indoor tomato farm using only LED lights) இந்த ஆண்டின் பிற்பகுதியில் அபுதாபியில் செயல்படத் தொடங்கவுள்ளது. இது புதிய விவசாய முயற்சிக்கு, மாதர் ஃபார்ம்ஸ் (Madar Farms), பல மில்லியன் திர்ஹம்ஸ் முதலீடு செய்ததன் ஒரு பகுதியாகும்.

அபுதாபி நிலைத்தன்மை வாரத்தில் கடந்த செவ்வாயன்று (January 14 2020), தற்போது கலீஃபா தொழில்துறை மண்டல அபுதாபியில் (Khalifa Industrial Zone Abu Dhabi (KIZAD)) கட்டுமானத்தில் உள்ள 5,000 சதுர மீட்டர் கொண்ட இந்த பண்ணையை, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மடார் ஃபார்ம்ஸ், கூட்டணியாக செர்தான், இன்னோ-3பி மற்றும் சிக்னிஃபை ஆகியவற்றுடன் சேர்ந்து இயக்குகின்றது என்று மடார் ஃபார்ம்ஸ் அறிவித்துள்ளது.

மைக்ரோகிரீன்களையும் வளர்க்கும் இந்த வசதி, இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது மடார் ஃபார்ம்ஸ் வளர்க்கும் மைக்ரோகிரீன்களின் அளவை மூன்று மடங்காக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறையில் வளர்ந்த அனைத்து பொருட்களும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் (உள்நாட்டில்) விநியோகிக்கப்படும்.

MICROGREENS
some examples of MicroGreens

டச்சு நிறுவனமான செர்தானால் (Dutch firm Certhon) வடிவமைக்கப்பட்ட இந்த தக்காளி பண்ணை, 5,000 க்கும் மேற்பட்ட அதி திறமையான எல்.ஈ.டி (ultra efficient LED) பொருத்தங்களுடன் நிறுவப்படும். அதுமட்டுமில்லாமல் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செர்டனின் தனியுரிம குளிரூட்டல் மற்றும் ஆட்டோமேஷன் அமைப்புகளை (Certhon’s proprietary cooling and automation systems) இந்த பண்ணை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மேலும் இதுபோன்ற நிலையான விவசாய முறைகளுக்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, இந்த பண்ணையில் வளரும் தக்காளிகள், உலகில் மிகவும் நீர் திறன் கொண்ட முறையைப் (most water-efficient system in the world) பயன்படுத்தி வளர்க்கப்படும். அதாவது மிக உயர்ந்த தொழில்நுட்ப பசுமை இல்லங்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு கிலோ தக்காளிக்கு 30 சதவீதம் குறைவான தண்ணீரையே பயன்படுத்தும்.

மேலும் மடார் ஃபார்ம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான அப்துல்அஸிஸ் அல்முல்லா கூறுகையில், “எங்களின் இந்த புதிய அதிநவீன விவசாய வசதி, மடார் பண்ணைகளுக்கு (Madar Farms) ஒரு மைல்கல் தருணமாக விளங்கும். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து வருவதால், நிலைத்தன்மையில் அதிக கவனம் செலுத்துதல் மிகவும் அவசியமாகும். எங்களின் புதிய பண்ணை இந்த அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உதவும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நுகர்வோருக்கு உள்நாட்டில் வளர்க்கப்படும் சிறந்த தரமான புதிய தயாரிப்புகளை அனுபவிக்க கூடுதல் விருப்பங்களையும் வழங்கும். ” என்கிறார்.

Loading...