அபுதாபியில் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிரேன் ஆபரேட்டருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் 240,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அபுதாபியின் தவீலா பகுதியில் புதிதாக கட்டப்பட்ட இடத்தில் கிரேன் ஒன்றை இயக்கிக்கொண்டிருந்த ஊழியர் மீது உயரத்தில் இருந்து கான்கிரட்கற்கள் விழுந்தது.
பின்னர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஊழியரின் இடுப்புப் பகுதியில் பல எலும்பு முறிவுகள் மற்றும் வலது முழங்காலின் நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
அதன் காரணமாக, அபுதாபி குடும்பம், சிவில் மற்றும் நிர்வாக நீதிமன்றம் கட்டுமான நிறுவனமும், அதன் பாதுகாப்பு அதிகாரியும் பாதிக்கப்பட்ட ஊழியருக்கு இழப்பீடு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கட்டுமான நிறுவனத்திற்கும் பாதுகாப்பு அதிகாரிக்கும் 240,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்து அபுதாபி கிரிமினல் நீதிமன்றம் உத்தரவிட்டது.