UAE Tamil Web

PCR டெஸ்டில் ஏற்பட்ட குழப்பம் ; துபாய் வர முடியாமல் ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட இந்தியர்கள்..!

flight-delays

கொரோனா காரணமாக ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமீரகம் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகஸ்டு 5 ஆம் தேதிமுதல் இந்தியா உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து அமீரகம் திரும்ப அனுமதியளித்தது.

பயணிகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளும் வெளியிடப்பட்டன. பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் PCR கொரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்பதும் அந்த விதிமுறைகளுள் ஒன்றாகும்.

இருப்பினும் நேற்று லக்னோ விமான நிலையத்திலிருந்து துபாய் வந்த விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் சிலரை, ஊழியர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அமீரக அரசு விதித்துள்ள பயண நெறிமுறைகளை பின்பற்றவில்லை என அவர்களிடம் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரை தொடர்புகொண்டு பேசியதில் அவருடைய PCR பரிசோதனை எடுக்கப்பட்டு 48 மணிநேரங்கள் கடந்துவிட்டதாக அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாக கூறினார்.

என்ன சிக்கல்?

பயண நேரத்திற்கு முன்பு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் PCR சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையில், பரிசோதனைக்காக மாதிரி அளிக்கப்பட்ட நேரத்தில் இருந்து இந்த 48 மணிநேரம் கணக்கிடப்படுகிறது என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்காததே இந்த சிக்கலுக்குக் காரணம்.

PCR பரிசோதனை அறிக்கையை கையில் வாங்கிய நேரத்தில் இருந்து சிலர் 48 மணிநேரங்களை கணக்கிட்டுக்கொள்வதால் இம்மாதிரியான சிரமங்களை சந்தித்துவருகிறார்கள்.

ஆகவே, பரிசோதனை மையத்தில் உங்களிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டதிலிருந்து அடுத்த 48 மணிநேரத்திற்குள் விமான புறப்பாடு இருக்கும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளுங்கள் மக்களே…

flight-delays
14 Shares
Share via
Copy link