ஷார்ஜா சாரிட்டி இன்டர்நேஷனல் (எஸ்சிஐ) தொடங்கியுள்ள ‘வார்ம் வின்டர்’ பிரச்சாரத்தில் ஷார்ஜாவின் தொழிலாளர் தர மேம்பாட்டு ஆணையம் (எல்எஸ்டிஏ) வழங்கிய 500 குளிர்கால ஆடைகளை கட்டுமான நிறுவனங்களின் தொழிலாளர்கள் பெற்று கொண்டனர்.
LSDA தலைவர் சேலம் யூசுப் அல் கசீர் கூறுகையில், “ இந்த பிரச்சாரமானது தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அவர்களின் முக்கிய பங்கை வெளிப்படுத்தும் அதிகாரத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்கிறது.
தொழிலாளர்களுக்கு ஆதரவை விரிவுபடுத்தும் விதமாக , சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினரும், ஷார்ஜாவின் ஆட்சியாளருமான ஹிஸ் ஹைனஸ் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமியின் தொலைநோக்கு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப இத்திட்டம் பின்பற்றப்படுகிறது. வளர்ச்சி செயல்பாட்டில் தொழிலாளர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அவர் எப்போதும் வலியுறுத்துவதாகவும்” யூசுப் அல் கசீர் கூறினார்.
ஃபாஸ்ட், அல் ஹமத் மற்றும் அல் வத்பா ஒப்பந்தம் ஆகிய மூன்று கட்டுமான நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு LSDA குழு ஆடை அடங்கிய பைகளை விநியோகித்தது. தொழிலாளர்களுக்கு ஒற்றுமையைக் காட்டவும், அவர்களின் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாகவும், நிறுவனங்களின் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கட்டுமானத் தளங்களை குழுவினர் பார்வையிட்டனர்.