UAE Tamil Web

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு துபாய் துணை தூதரகம் முக்கிய அறிவிப்பு

இந்திய பாஸ்போர்ட்டை சிதைக்கும் டிராவல் ஏஜென்ஸிகளிமிருந்து விழிப்புடன் இருக்குமாறு இந்தியர்களை துபாயின் இந்திய துணைத் தூதரகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து ட்விட்டரில் துபாயில் உள்ள இந்தியாவின் துணை தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய பாஸ்போர்ட்களை பல டிராவல் ஏஜென்ஸிகள் விளம்பர தளமாக பயன்படுது வருகின்றனர். இந்தியர்களின் பாஸ்போர்ட்டை டிராவல் ஏஜென்சி ஸ்டிக்கர்களை ஒட்டி சின்னாபின்னமாக்கி  வருகின்றனர்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செய்லகள் இந்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறுவதாகும். இது குறித்து தூதரகம் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பாஸ்போர்ட்களில் விளம்பர ஸ்டிக்கர் இல்லாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இந்திய துணை தூதரகம் கூறியுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap