UAE Tamil Web

பஸ்ஸை திருடி மறைக்க முடியாமல் சிக்கிக்கொண்ட 2 தொழிலாளர்கள் – அலேக்காக தூக்கிய துபாய் போலீஸ்..!

Child-diesin-bus-750x450

துபாயில் கட்டுமான நிறுவனமொன்றில் பணியாளர்களை அழைத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டுவந்த பேருந்தை அதே நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த 2 தொழிளாலார்கள் திருடி விற்பனை செய்திருக்கிறார்கள்.

அதில் ஒருவர் சமையல் வேலையும் மற்றொருவர் கட்டுமானப் பிரிவிலும் பணிபுரிந்திருக்கிறார்கள். பேருந்து நிற்குமிடம், ஆட்களின் நடமாட்டம் என அனைத்தையும் பல நாட்களாக கவனித்துவந்த இந்த இரு பலே திருடர்களும் துபாய் முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களை கருத்தில்கொள்ள தவறிவிட்டார்கள்.

ஆகவே, பேருந்தைத் திருடியதாக அந்நிறுவனம் காவல்துறையில் புகார் கொடுத்த அன்றே இரண்டு உத்தமர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து பேருந்தும் கைப்பற்றப்பட்டது.

துபாய் முதன்மை நீதிமன்றம் இருவருக்கும் 86,000 திர்ஹம்ஸ் அபராதமும் ஒருவருட சிறைத்தண்டனையும் விதித்தது. தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் இருவரும் நாடுகடத்தப்படவேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது. வழக்கை மீண்டும் விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், முதன்மை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.

Child-diesin-bus-750x450
1 Share
Share via
Copy link