UAE Tamil Web

வெப்பநிலை குறையும், மக்கள் கடற்கரைக்குச் செல்லவேண்டாம் – வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை..!

rough sea

அமீரகத்தில் இன்று வெப்பநிலை குறையும் என தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

அமீரகத்தில் இன்று பகுதி மேகமூட்டமாக இருக்கும் எனவும் நாளின் பிற்பகுதியில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என NCM தெரிவித்திருக்கிறது.

காற்றானது மிதமாக வீசும். சில நேரங்களில் கடற்பகுதியில் அதிவேகத்தில் வீசலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய வளைகுடாவில் கடல் சீற்றமாகவும் சில நேரங்களில் சீற்றம் மிக அதிகமாக இருக்கும் என NCM மக்களை எச்சரித்திருக்கிறது. ஓமான் கடற்பகுதியில் மிதமான சீற்றம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rough sea
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap