UAE Tamil Web

படிச்சால் வாழ்க்கைல முன்னுக்கு வரலாம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு ரோஜாப்பூ வழங்கி அட்வைஸ் செய்த அஜ்மான் காவல்துறை!

கோடை விடுமுறைக்குப் பிறகு பல நாட்கள் கழித்து அமீரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கின. முதல் நாள் அன்று மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் அஜ்மான் காவல்துறை எடுத்த முன்னெடுப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது. அல் ரவ்தா பகுதியில் அமைந்துள்ள கவ்லா அல் ரவ்தா பள்ளிக்கு நேரடியாகச் சென்ற அஜ்மான் காவல்துறையின் உயர் அதிகாரிகள் வகுப்புகளுக்கு வந்த மாணவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி வாத்துகளோடு வரவேற்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by شرطة عجمان (@ajmanpoliceghq)

புதிய கல்வியாண்டில் அடி எடுத்தும் வைக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் போலீசார் தரப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் பல உயரங்களை அடையலாம் என உதாரணங்களோடு எடுத்துச் சொல்லப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பாதுகாப்புடன் கல்வி பயில வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. முதல் நாள் அன்றும் காவல்துறை அதிகாரிகள் ரோஜாப்பூ வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தது மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகளை அஜ்மான் காவல்துறை தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link