UAE Tamil Web

அமீரகத்தில் 136 ஆகக் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 204 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (8/10/2021) அன்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 8, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 737,509 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 730,734 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,111 ஆகவும் உயர்ந்துள்ளது.

1 Share
Share via
Copy link