UAE Tamil Web

கொரோனா பரவலை தடுக்க 10 மில்லியன் திர்ஹம்ஸ் நன்கொடை அளித்த எமிரேட்ஸ் இஸ்லாமிக் வங்கி..!

emirates

துபாயில் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகளின் துறையால் (IACAD) தொடங்கப்பட்ட ‘கொரோனா வைரஸிற்கு எதிரான சமூக ஒற்றுமை நிதிக்கு’ (Community Solidarity Fund) ஆதரவாக அமீரகத்தின் NBD குழுமத்தின் ஒரு பகுதியான ‘எமிரேட்ஸ் இஸ்லாமிக்’ 10 மில்லியன் திர்ஹம்ஸை நன்கொடையாக அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் சுகாதார, பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை நீக்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

இதுகுறித்து அமீரகத்தின் NBD குழுமத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனர் மற்றும் எமிரேட்ஸ் இஸ்லாமியத் தலைவருமான ஹேஷாம் அப்துல்லா அல் காசிம் கூறும்போது, “கோவிட் -19 க்கு எதிரான சமூக ஒற்றுமை நிதிக்கு இந்த பங்களிப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதுமட்டுமில்லாமல் இந்த முக்கியமான காலகட்டத்தில் தனிநபர்கள், அரசு மற்றும் வணிகத் துறைக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆதரிப்பதற்காகவும், இந்த நிதியை கொண்டு சமூகத்தின் உறுப்பினர்களுக்கு மிகவும் தேவைப்படும் மருத்துவ மற்றும் பொருளாதார உதவிகளை செய்வதற்காகவும் எங்களால் முடிந்த இந்த பங்களிப்பை வழங்கியுள்ளோம் என்று கூறினார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக IACAD அறிவித்த இந்த நிதியானது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையின் வழிகாட்டுதல்களின் கீழ் சமூக பங்களிப்புகளையும் நன்கொடைகளையும் எளிதாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கு துபாய் நிதி நிறுவனமான ‘எமிரேட்ஸ் இஸ்லாமிக்’ தான் முதலாவதாக நிதி உதவியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times.

emirates
0 Shares
Share via
Copy link