கொரோனா வைரஸ்: ஷார்ஜா அரசு மின்சார கட்டணங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி அறிவிப்பு.!

sharjah ruler

உச்சநீதிமன்ற உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி, ஷார்ஜாவில் மின்சார கட்டணங்களுக்கு 10 சதவீத தள்ளுபடியை (நான்கு மாதங்களுக்கு) இன்று (March 24 2020) அறிவித்துள்ளார்.

வானொலி நிகழ்ச்சியில் பேசிய ஷேக் சுல்தான், கோவிட் -19 கொரோனா வைரஸை எதிர்த்து நாடு போராடும் போது, ​​குடியிருப்பாளர்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்க ஷார்ஜா அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் பல நடவடிக்கைகளில் இந்த முடிவு ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட முடிவுக்காக ஷார்ஜா அரசுக்கு 230 மில்லியன் திர்ஹம்ஸ் செலவாகும் என்று ஷேக் சுல்தான் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஷார்ஜா ஆட்சியாளர், முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக, துபாயில் அறிவிக்கப்பட்ட ஒரு தூண்டுதல் தொகுப்பின் ஒரு பகுதியாக, DEWA (Dubai Electricity and Water Authority) பில்களில் 10 சதவீதம் தள்ளுபடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Loading...