கொரோனா குறித்த வதந்திகளை பரப்பாதீர்கள்..! தொடர் கண்காணிப்பில் 72 போலீஸ் ரோந்து வாகனங்கள்..!

patrol
Image Credits- Khaleej Times

அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ராஸ் அல் கைமா காவல்துறையினரால் 72 ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான உள்துறை அமைச்சகத்தின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஸ் அல் கைமா காவல் துறையின் பொதுத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுவைமி தெரிவித்தார்.

“ரோந்து போலீசார் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தேவையற்ற வதந்திகளை தடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தின் கட்டளைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

“உணவு அல்லது மருந்து பொருட்கள் வாங்குவதற்கான அவசரத் தேவை இல்லாவிட்டால் வீட்டிலேயே இருக்க வேண்டும். ஆபத்தான இந்த வைரஸின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் பொதுமக்களுக்கு தேவையான உதவிக்குறிப்புகள் மற்றும் ஆலோசனைகள் அரபு, ஆங்கிலம் மற்றும் உருது உள்ளிட்ட பல மொழிகளில் உள்ளன என்று கூறினார்.

Loading...