தனியார் துறை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி.! துபாய் பொருளாதாரத்துறை கட்டளை.!

work from home

கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல முயற்சிகளை அமீரக அரசு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக துபாயின் பொருளாதார மேம்பாட்டுத்துறை (Department of Economic Development,Dubai) அனைத்து தனியார் துறை நிறுவனங்களுக்கும் அந்நிறுவனங்களின் 80 சதவீத ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை (Work From Home) தொடங்க அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு மார்ச் 25,2020 முதல் ஏப்ரல் 9,2020 வியாழக்கிழமை வரை பின்பற்றப்பட உள்ளது.

துபாய் பொருளாதார மேம்பாட்டுத்துறையின் படி மருந்தகங்கள், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிற்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...