அமீரகத்தில் #StayHome அறிவுறுத்தலை மீறுபவர்களுக்கு 1 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம்.! ஒரு வருட சிறைத்தண்டனை.!

Dubai police warned no fake news

#Stayhome தேசிய பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை மதிக்காமல் அலட்சியத்தோடு நடந்துகொண்ட வீடியோவை வெளியிட்டதற்காகவும், அதிகாரிகள் அறிவித்த சமூகம் சார்ந்த தொலைதூர வழிமுறைகளை மீறுவதற்கு பொதுமக்களை ஊக்குவித்ததற்காகவும் அரபு வம்சாவளியைச் சேர்ந்த ஒரு ஐரோப்பிய நாட்டு பெண்ணை துபாய் காவல்துறை கைது செய்துள்ளது.

இதுகுறித்து துபாய் காவல்துறையினர் “அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த வழக்கு பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

 

View this post on Instagram

 

#repost @dubaimediaoffice ・・・ شرطة دبي تلقي القبض على شابة أوروبية من أصول عربية بثت مقطع فيديو يظهر عدم اكتراثها بمبادرة #خلك_في_البيت والتعليمات الصحية والأمنية الحالية، وتحولها إلى نيابة مكافحة جرائم تقنية المعلومات بالنيابة العامة الاتحادية. الشرطة تؤكد أهمية الالتزام بالتعليمات حفاظاً على السلامة العامة، وتحذر من مخالفتها. عقوبة الحبس وغرامة لا تقل عن 200 ألف درهم ولا تتجاوز مليون درهم، أو إحدى العقوبتين، لكل من دعا أو حرض بأي طريقة تقنية أو وسيلة معلوماتية لعدم الانقياد إلى القوانين والأنظمة المعمول بها في الدولة. . Dubai Police has arrested a European national of Arab origin for posting a video showing her indifference to the #StayHome national campaign and encouraging people to defy authorities’ social distancing instructions. Legal measures were taken against her. The case has been referred to the Federal Public Prosecution for Information Technology Crimes. Dubai Police stresses the importance of residents fully complying with directives issued by authorities to safeguard public health. Inciting non-compliance with safety measures will lead to imprisonment and/or a fine of between AED200,000 and AED1 million.

A post shared by Dubai Police شرطة دبي (@dubaipolicehq) on

இந்த கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அதிகாரிகள் பிறப்பித்த கட்டளைகளை குடியிருப்பாளர்கள் முழுமையாக பின்பற்றுவது எவ்வளவு அவசியம் என்பதை துபாய் காவல்துறை பலமுறை வலியுறுத்தியுள்ளது.

தற்போது இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்காதவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் / அல்லது 200,000 முதல் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுபோக உள்ளூர் மற்றும் கூட்டாட்சி சட்டங்களையும், பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களையும் மீற வேண்டாம் என்று காவல்துறை அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கைகளை மீறும் எவரும் முழுமையாக சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

முதற்கட்டமாக அதிகாரபூர்வ அதிகாரிகள் வழங்கிய தெளிவான அறிவுறுத்தல்கள், சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு துபாய் காவல்துறை மீண்டும் மீண்டும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இந்தச் சட்டங்களை மீறுதலை அறியாமை என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவற்றை மீறும் எவரும் சமூக பொறுப்பற்றவர்கள் என்று தண்டிக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் துபாய் காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொதுமக்களுக்கு அச்சம், பீதி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இத்தகைய செயல்களின் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமல், அறிவுறுத்தல்களை மீறுவது மற்றும் வதந்திகளை பரப்புவது போன்ற எந்த ஒரு தப்பான செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

முன்னதாக, இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் வகையில் உள்ளூர் கடற்கரைக்கு சென்று வீடியோவை வெளியிட்டதற்காக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Loading...