சுகாதாரத் துறை மற்றும் பள்ளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 13 மில்லியன் திர்ஹம் நன்கொடையை வழங்கும் ஈசா சலேஹ் அல் குர்க் குழுமம்.!

UAE holidays: Cabinet approves new list for 2019-20

துபாயில் உள்ள சுகாதாரத் துறை மற்றும் பள்ளிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் 13 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள நன்கொடைகளை ஈசா சலேஹ் அல் குர்க் குழு அறிவித்துள்ளது. இது உலகளாவிய கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு ஐக்கிய அரபு அமீரக வணிக சமூகம் நாட்டிற்கு அளிக்கும் ஆதரவின் ஒரு பகுதி.

மனிதாபிமான செயலின் ஒரு பகுதியாக, ஈசா சலேஹ் அல் குர்க் குழுவின் தொண்டு அறக்கட்டளை அமீரகத்தின் தொலைதூரக் கல்வி முயற்சியை ஆதரிப்பதற்காக துபாயில் உள்ள பொது மற்றும் இலாப நோக்கமற்ற பள்ளிகளுக்கு (Non-Profit Schools) 3 மில்லியன் திர்ஹம் நன்கொடை அறிவித்தது.

எங்கள் அறக்கட்டளை துபாய் கல்வி மண்டலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கணினிகளை வழங்கும் என்று அக்குழுமம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸிற்கு எதிரான துபாய் சுகாதார ஆணையத்தின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணமாகவும் ஈசா சலேஹ் அல் குர்க் குழுமமும் 10 மில்லியன் திர்ஹம் நன்கொடை அளித்துள்ளது.

இந்த நன்கொடை குறித்து கருத்து தெரிவித்த ஈசா சலேஹ் அல் குர்க் குழுமம்; “தேசத்திற்கு திருப்பித் தருவதற்கும், சமூக பொறுப்புணர்வு முயற்சிகளை வணிக சமூகம் முழுவதும் ஊக்குவிப்பதற்கும் ஒரு பகுதியாகும் என்றது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கையை பரப்புவதில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான உலகளாவிய மாதிரியை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தது.

இதை தவிர்த்து அல் குர்க் குழுமம், ஈசா சலேஹ் அல் குர்க் குழுமம் துபாய் ரியல் எஸ்டேட்டுக்கு சொந்தமான குடியிருப்பு கட்டிடங்களின் வாடகைதாரர்களுக்கு மூன்று மாதங்களுக்கு வாடகை கட்டணத்தை ஒத்திவைக்கும் விருப்பத்தையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times

Loading...