கொரோனா வைரஸ்: அமீரகத்தில் மளிகைக் கடைகள், மருந்தகங்கள் 24 மணி நேரமும் இயங்கும்..!

grocery
Image Credits- Khaleej Times

அமீரகத்தில் உணவு விற்பனை நிலையங்கள்(food outlets), கூட்டுறவு சங்கங்கள்(cooperative societies), மளிகைக் கடைகள்(groceries), பல்பொருள் அங்காடிகள்(supermarkets) மற்றும் மருந்தகங்கள்(pharmacies) 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று (புதன்கிழமை) அறிவித்தது.

வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடையே இரண்டு மீட்டர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதே வேளையில், கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக கடையில் வேலை செய்யும் நபர்களின் மொத்த எண்ணிக்கை 30 சதவீதத்தை தாண்டக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் பொது பாதுகாப்பு மற்றும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த அமீரகத்தின் திறமையான அமைப்புகளால் எடுக்கப்பட்ட தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும்” என்று இரு அமைப்புகளும் தங்கள் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், மீன், இறைச்சி மற்றும் காய்கறி சந்தைகளுடன் அனைத்து வணிக மையங்களும் ஷாப்பிங் மால்களும் இரண்டு வார காலத்திற்கு மூடப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்த விற்பனையாளர்களைக் கையாளும் மீன், இறைச்சி மற்றும் காய்கறி சந்தைகள், கூட்டுறவு சங்கங்கள், மளிகைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் மற்றும் உணவு சில்லறை விற்பனை நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...