கொரோனா வைரஸ்: அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட் சேவைகள் தற்காலிக நிறுத்தம்..!

passport
Image Credits- Khaleej Times

துபாய் மற்றும் வடக்கு அமீரகத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் இந்திய பாஸ்போர்ட் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று துபாயிலுள்ள இந்திய துணைத் தூதரகம் இன்று (செவ்வாய்) இதை உறுதிப்படுத்தி ட்வீட் செய்துள்ளது.

ஏப்ரல் 7 ஆம் தேதி வரை சேவைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

எதாவது அவசரகால சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கான தகுந்த விளக்க ஆவணங்களுடன் passport.dubai@mea.gov.in என்ற மின்னஞ்சல் வழியாக தூதரகத்தோடு தொடர்பு கொள்ள முடியும். இதன் மூலம் தூதரக அதிகாரிகள் சம்மந்தப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...