கொரோனா வைரஸ்: அமீரகத்தில் லூலூ & கேரிஃபோர் வழக்கம் போல் இயங்கும்.!

carrefour and Lulu

கோவிட் -19 கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வணிக ஷாப்பிங் சென்டர்கள், மால்கள், மீன், இறைச்சி மற்றும் காய்கறி சந்தைகளை இரண்டு வாரங்கள் மூட வேண்டும் என்ற அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், நாட்டின் பல்பொருள் அங்காடி குழுமங்கள் (Supermarket Chains) வழக்கம் போல் செயல்படும் என்று அக்குழுமங்கள் அறிவித்துள்ளன.

மொத்த விற்பனையாளர்களைக் கையாளும் மீன், இறைச்சி மற்றும் காய்கறி சந்தைகளுடன், கூட்டுறவு சங்கங்கள் (cooperative societies), மளிகைக் கடைகள் (grocery stores), பல்பொருள் அங்காடிகள் (Super markets), மருந்தகங்கள் மற்றும் உணவுக்கடைகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களை தவிர பிறவற்றிற்கு இந்த இரண்டு வார மூடல் அறிவிப்பு பொருந்தும்.

இந்த அறிவிப்பினால் பீதியடைந்த மக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வண்ணம் நாட்டில் இயங்கும் இரண்டு பெரிய பல்பொருள் அங்காடி குழுமங்களான லூலூ (LuLu) மற்றும் கேரிஃபோர் (Carrefour) ஆகியவை தொடர்ந்து இயல்பாகவே செயல்படும் என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

லூலூ-வின் அறிக்கை:

“அமீரகத்தில் உள்ள அதன் அனைத்து கிளைகளும் தினமும் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வழக்கம்போல செயல்படும். வைரஸ் காரணமாக கொடுக்கப்பட்ட அதிகாரிகளின் சமீபத்திய அறிவிப்பின்படி செயல்பாட்டு நேரங்களில் எந்த மாற்றமும் இருக்காது” என்று லூலூ நிர்வாகம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் “அனைத்து வகை தயாரிப்புகள், குறிப்பாக அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு சப்ளையர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் தளவாட கூட்டாளர்களுடன் (logistics partners) லூலூ மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகிறது”

“லூலூ ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள லூலூ-வின் கிடங்குகள் (LuLu Warehouse) ஆகிய இரண்டிலுமே மிகச் சிறப்பாக அனைத்து வகை பொருட்களும் சேமிக்கப்பட்டுள்ளன. எனவே பொருட்களை வாங்குதல் குறித்து எந்தவிதமான கவலையும் அல்லது பீதியும் மக்களுக்கு தேவையில்லை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கேரிஃபோரின் அறிக்கை:

“அமீரகத்தின் ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மூடப்படும் இச்சூழலில், ​​எங்கள் கடைகள் அனைத்தும் திறந்திருக்கும். அத்துடன் வாடிக்கையாளர்களுக்காக, அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் முழுமையாக சேமித்து வைக்கப்பட்டு, எங்கள் வழக்கமான நேரத்தில் இயங்குகின்றன. எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் அனைவரையும் மற்றவர்களைப் பற்றி கவனமாக சிந்தித்து பொறுப்புடன் ஷாப்பிங் செய்ய ஊக்குவிக்கிறோம். எங்கள் பங்கு மற்றும் விநியோக குழுமங்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக பங்கு நிலைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்”.

“அதுமட்டுமின்றி நாங்கள் சப்ளையர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். ஆதலால் இந்நேரத்தில் பொருட்களின் விலைகளை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு சிரமம் அளிக்க மாட்டோம் என்பதில் உறுதியுடன் இருக்கின்றோம்” என்று கேரிஃபோர் அளித்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...