37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

துபாயில் மற்றொரு கொரோனா வைரஸ் வழக்கா.? துபாய் அமைச்சகம் விளக்கம்.!

coronovirus in dubai

துபாய் வட்டாரத்தில் கொடூர கொரோனா வைரஸின் மற்றொரு வழக்கு கண்டறியப்பட்டதாக பரவப்பட்ட ஒரு வைரல் வீடியோ பொய்யானது என்பதை ஐக்கிய அரபு அமீரக சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் (MOHAP) மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

துபாயின் முக்கிய குடியிருப்பு சமூகத்தில் ஒன்றின் சந்தையிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோ, ‘துபாயில் மற்றொரு கொரோனா வைரஸ் வழக்கு’ மற்றும் ‘தயவுசெய்து இந்த இடத்தை நோக்கிச் செல்ல வேண்டாம்’ என்ற தலைப்புகளுடன் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.

எனினும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின், சுகாதார மையங்கள் மற்றும் கிளினிக்குகள் துறையின் உதவி துணை செயலாளர் டாக்டர் ஹுசைன் அப்தெல்-ரஹ்மான் அல்-ராண்ட் அமீரக ஊடகமான கலீஜ் டைம்ஸிடம் “இது ஒருவிதமான பயிற்சி என்று நான் கருதுகிறேன். தவிர கவலைப்பட ஒன்றுமில்லை. MOH மேற்பார்வையின் கீழ் உள்ள, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குடும்பத்தை தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தில், கொரோனா வைரஸின் உறுதிப்படுத்தப்பட்ட வேறு வழக்குகள் எதுவும் இல்லை. வதந்திகளை நினைத்து மக்கள் கவலைப்படக்கூடாது.” என்று கூறி உறுதிப்படுத்தினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (பெயர் வெளியிடப்படாத) மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சீன குடும்பத்தின் சுகாதார நிலை குறித்து டாக்டர் அல்-ராண்ட் கூறுகையில், “உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த சர்வதேச தனிமைப்படுத்தப்பட்ட தரத்தின்படி, இந்த குடும்பம் மொத்தம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருக்கும். இதைப் பின்பற்றி, நோயாளிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நலன்களுக்காக நாங்கள் நடைமுறைகளைப் பின்பற்றுவோம். தற்போது அந்த வைரஸ் நிலையாக உள்ளது. அவை பெரிய அறிகுறிகளை எதுவும் காட்டவில்லை.” என்றார்.

இதையும் படிங்க.!