கொரோனா வைரஸ்: ஷார்ஜாவில் உள்ள அனைத்து AC பஸ் நிறுத்தங்களும் மூடல்.! RTA அறிவிப்பு.!

RTA closed

ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மேலும் அறிவிக்கப்படும் வரை, குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கான அனைத்து பேருந்து நிறுத்தங்களையும் மூடுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கும் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

“உங்கள் பாதுகாப்பிற்காகவும், பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க தொடர்ச்சியாக எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காகவும், குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கான அனைத்து பேருந்து நிறுத்தங்களையும் மூட முடிவு செய்யப்படுகிறது” என்று RTA ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

Loading...