கொரோனா வைரஸ்: சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க அனைவரையும் அழைக்கிறார் ஷேக் முஹமது.

sheik mohamed

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அமீரகத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆன்லைன் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்க ஷேக் முகமது பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் ட்வீட் செய்ததாவது: “நீங்கள் தான் எங்களது முதல் பாதுகாப்பு வரிசை. உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் தியாகங்களுக்கும், நாட்டின் நலனுக்காக நீங்கள் பாதிக்கப்பட்டவர்களை கவனித்ததற்கும் நன்றி. நீங்கள் இன்று தாயகத்தின் பாதுகாவலர்கள் மற்றும் அதன் விசுவாசமான வீரர்கள் ஆவீர்கள். நாட்டு மக்கள் அனைவரையும் இவர்களுக்கு நன்றி  தெரிவிக்குமாறு அழைக்கிறேன்” என்றுள்ளார்.

மேலும் அமீரக குடியிருப்பாளர்கள் #ThankYouHeroes என்ற Hashtag உடன் நன்றியைத் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஷேக் முகமது இந்த குழப்பமான சூழ்நிலைகளில் சுகாதார ஊழியர்கள் எவ்வாறு கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை குறிக்கும் வண்ணமாக உருக்கமான ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Loading...