22.7 C
Dubai
October 23, 2020
UAE Tamil Web

கொரோனா வைரஸ்: அமீரகத்தில் மேலும் 6 பேர் பாதிப்பு.!

corona

அமீரகத்தில் மேலும் புதிதாக 6 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்(03.03.2020) அன்று அறிவித்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட ஆறு நபர்களில் 2 பேர் ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் என்றும், 2 பேர் இத்தாலியா நாட்டை சேர்ந்தவர் என்றும், ஒருவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் என்றும் மற்றும் ஒருவர் கொழும்பியா நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சமீபத்தில் கொரோனா வைரஷால் பாதிக்கப்பட்ட இரண்டு சைக்கிள் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அமீரகத்தில் கொரோனா வைரஷால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்த்துள்ளதுள்ளது. அதில் 5 பேர் முழுவதுமாக குணப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



error: Alert: Content is protected !!