கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கைகளை எப்படி பயன்படுத்த வேண்டும்.? துபாய் காவல்துறை விளக்கம்.

Use hands properly

கொடூர கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல வழிகளை மேற்கொள்ளும் இவ்வேளையில், குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான மற்றொரு முயற்சியாக, துபாய் காவல்துறை கடந்த செவ்வாயன்று (March 24 2020) மக்கள் கைகளை எவ்வாறு பல பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதனை அறிவுறுத்தியது.

அதாவது கதவு கைப்பிடிகள், மேற்பரப்புகள் அல்லது பணத்தை கையாளும் போது கூட தங்கள் ஆதிக்க கையைப் (அதிகமாக பயன்படுத்தப்படும் கை) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுள்ளனர். ஏனென்றால், அதிக காரணங்களுக்காக பயன்படாத கையால் ஒருவரின் முகத்தைத் தொடுவது மிகவும் அசாதாரணமானது ஆகும். இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என தமது அதிகாரபூர்வ சமூக பக்கங்களில் துபாய் காவல்துறை பகிர்ந்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர், பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகள் கைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக துபாய் தெருக்களில் ரோந்து சென்று வருகின்றனர். மக்களை முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்துகின்றனர்.

Loading...