கொரோனா அச்சுறுத்தல்: பிரபல யாஸ் மால், உலக வர்த்தக மையம் அபுதாபி மூடப்படுவதாக அறிவிப்பு.!

யாஸ் மால், உலக வர்த்தக மையம் (WTC) அபுதாபி மற்றும் பிற அல்டார் நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் மால்கள் மார்ச் 24 செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் இருக்கும் அனைத்து வர்த்தக மையங்களையும் இரண்டு வாரங்களுக்கு மூட ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளதாக கடந்த மார்ச் 23,2020 தேதி அறிக்கை வெளியானது. இது 48 மணி நேரத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்றும், மறுஆய்வு மற்றும் மறு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) மற்றும் தேசிய அவசர, நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அல்டார் நிறுவனம் இந்த உத்தரவை ஒரு நாளைக்கு முன்னதாகவே கடைப்பிடிப்பதற்கான முடிவை எடுத்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் மார்ச் 24 முதல் அல்டார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் அனைத்து மால்களும் மூடப்படும். அவை யாஸ் மால், உலக உலக வர்த்தக மையம் (WTC) அபுதாபி, அல் ரீம் தீவில் அமைத்துள்ள ஷாம்ஸ் பவுடிக், அல் அய்னில் உள்ள அல் ஜிமி மற்றும் ரீமால் மால் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் சமூகத்தின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வது அல்டார் நிறுவனத்தின் முன்னுரிமையாக உள்ளது. அரசாங்கம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக நிறுவனம் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுடனும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...